Thirukkural விக்கி

.குறளோடு உறவாடு " இலக்கிய அமைப்பு நடத்திய கவியரங்கில்

"செய்ந்நன்றி  அறிதல் "என்ற தலைப்பில் பைந்தமிழ்ப் பாவலர் இரா .இளமுருகன்பாடிய பாடலின் இறுதியில் வழங்கிய காவடிச்சிந்து !

சேலத் திலே போயி பொருள் சால வும்சி றந்த தென்று  ஏலத் திலெ டுத்து வந்து தந்ததால் ---ஊ ரில்  ஆலத் தீயெ டுத்து சிலர் வந்ததால் ---மக்கள்  உணர்வில் அனைவரும் மனையில் பயன்கொளும்  உரிய பொருளினை நிறைய பெறுவதை  புணரி யலையென மலியும் கனவினைக் 

13006686 1725166911087151 3015064284149790032 n

கண்ணிலே --கண்டு  புரியும் ஆட்சி நினைவில் விழுகிறார்  மண்ணிலே ! காலத் தினாற் செய்த நன்றி ஞாலத் தின்மா னப்பெ ரிதாம்  சீலத் தைம றந்த வர்க்குச் செப்பினார் --வள்ளுவர்  மூலத் தைம றந்த வராய்த் துப்பினார் --அன்பின்  வழியில் எளியவர் உழலும் நிலையற  வறுமை விலகிட வளமை பெருகிட  இழிவை களைந்தவர் விழியில் மகிழ்வினில்  ஒன்றியே ---இருத்தல்  உலவும் தொகுதியின் உரிமை யாளரின்  நன்றியே ! ...............பைந்தமிழ்ப் பாவலர் இரா .இளமுருகன் .